UPDATED : ஆக 15, 2011 07:31 AM
ADDED : ஆக 15, 2011 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில், 'தமிழர்களால் நடத்தப்படும் பல்கலை நிகழ்ச்சியில், தமிழகத்தில் பணிபுரியும் அமெரிக்க துணை தூதர் மவுரின் சோவ் பங்கேற்று, தமிழர்கள் குறித்து, இனவெறியுடன் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட, கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமா அதிபராக உள்ள நாட்டின் பிரதிநிதியான மவுரின் சோவ், தமிழர்களை கறுப்பர்கள், அழுக்கானவர்கள் என விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இவரை போன்றவர்கள், இனியும் தமிழகத்தில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது.
அவரை, மத்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கண்டிப்பதுடன், நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.