sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுமலையை காப்பாற்றும் முயற்சி:தொடர் வழக்குகளால் சிக்கல்

/

சிறுமலையை காப்பாற்றும் முயற்சி:தொடர் வழக்குகளால் சிக்கல்

சிறுமலையை காப்பாற்றும் முயற்சி:தொடர் வழக்குகளால் சிக்கல்

சிறுமலையை காப்பாற்றும் முயற்சி:தொடர் வழக்குகளால் சிக்கல்


ADDED : ஆக 20, 2011 05:50 AM

Google News

ADDED : ஆக 20, 2011 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமலை:விவசாயிகளின் தொடர் வழக்குகளால், சிறுமலையை காப்பு காடுகளாக்கும் (ரிசர்வ் பாரஸ்ட்) பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு வனப்பகுதியை காப்பு காடுகளாக்கினால், முழுமையான சட்டங்கள் மூலம் குற்றங்களுக்கு கடும் தண்டனை கிடைக்க செய்ய முடியும். திண்டுக்கல் முதல் மதுரை எல்லை வரை விரிந்துள்ள சிறுமலை பகுதியில், தொன்றுதொட்டு பயன்படுத்தி வரும் விளைநிலங்கள் தவிர, மற்ற இடங்கள் வனப்பகுதியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளனர். இதனால் வனப்பகுதி சுருங்கி வருகிறது.

சிறுமலையை பாதுகாக்கும் விதமாக, காப்பு காடுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக 6,709 எக்டேரை கையகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதில், 3881 எக்டேர் காப்புகாடுகளாக மாற்றப்பட்டது. மீதமுள்ள வனப்பகுதியை மாற்றும் முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். ஆனால், விவசாயிகள் சங்கம் சார்பில் அடுத்தடுத்து வழக்குகள் தொடர்வதால், அனைத்தையும் எதிர்கொண்டு முறியடித்த பிறகே இது சாத்தியமாகும். இது குறித்து மாவட்ட வன அலுவலர் தங்கராஜூ கூறியது:

காப்பு காடுகளாக்கினால்,வன வளத்தை அழிப்பது தடுக்கப்படும். மலைப்பகுதியில் விளைநிலங்கள் சிறிதளவு வைத்துள்ளவர்கள் கூட, அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளனர்.

வழக்குகள் முடிவுக்கு வந்தால் இவற்றிற்கெல்லாம் தீர்வு காண முடியும், என்றார்.






      Dinamalar
      Follow us