ADDED : செப் 04, 2011 11:09 PM
மண்டபம்:கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடந்த ஏழு நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்கள் தங்களது தனி பொறுப்பில், 3ம் தேதிமீன்பிடிக்க சென்று, 4ம் தேதி கரை திரும்பினர். மண்டபம் மீன்துறை ஊழியர் கூறியதாவது: விசைப்படகு மீனவ பிரதிநிதிகள் அலுவலகம் வந்து 'பசியும், பட்டினியுமாக உள்ளோம். கடலுக்கு மீன்பிடிக்கச்செல்ல அனுமதி தாருங்கள். ஏதேனும் அசம்பாவிதங்கள் கடலில் நடந்தால், நாங்களே பொறுப்பு' என்று கூறினர். அவர்களுடைய சொந்த பொறுப்பில் அனுமதி சீட்டு(டோக்கன்) வழங்கினோம். நாளை(செப்.5)காற்றின்வேகத்தைப்பொறுத்து மீன்பிடி அனுமதி சீட்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும், என்றார். கடலுக்குச்சென்ற மீனவர்களுக்கு இறால் வரத்து அதிக அளவில் கிடைத்துள்ளதால், இன்றும்(செப்.5) மீனவர்கள் கடலுக்குச்செல்ல வாய்ப்புள்ளது.