sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சமூக அறிவியல் பாடத்தில்விடுபட்ட தகவலுக்கு கேள்வி?

/

சமூக அறிவியல் பாடத்தில்விடுபட்ட தகவலுக்கு கேள்வி?

சமூக அறிவியல் பாடத்தில்விடுபட்ட தகவலுக்கு கேள்வி?

சமூக அறிவியல் பாடத்தில்விடுபட்ட தகவலுக்கு கேள்வி?


ADDED : செப் 06, 2011 02:25 AM

Google News

ADDED : செப் 06, 2011 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்:'சமச்சீர் கல்வியில், ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், குளறுபடியுள்ளது' என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, அனைத்து வகுப்புக்கும், சமச்சீர் கல்வி அமலாக்கியுள்ளது.

அரசு பள்ளிகளுக்கு, தமிழ்வழி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாடப் புத்தகம் குறித்து, பெற்றோர் தரப்பில் எழுந்துள்ள புகார்:மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட, ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், 10 தலைப்புகளில் பாடங்கள் உள்ளன.



இதில், இரண்டாவது பாடத்தில், 'கோயிங் ஆன் டிரிப்ஸ்' எனும் தலைப்பில், தரை வழி மற்றும் கடல் வழியில், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்தவர்கள் குறித்து, படத்துடன் தகவல் உள்ளது. இதில் யுவான் சுவாங் குறித்த, விவரம் உள்ளது. கேள்வி பகுதியில், கோடிட்ட இடங்களை நிரப்பும் கேள்வியில், 'யுவான் சுவாங்' எழுதிய புத்தகம் எது? என, கேட்கப்பட்டுள்ளது. ஆனால், 'யுவான் சுவாங்' எழுதிய புத்தகம் குறித்த எந்த விவரமும், அந்த பாடத்தில் இல்லை. பாடத்தில் தரப்படாத தகவல் குறித்து, கேள்வி பகுதியில் கேள்வி கேட்டுள்ளனர்.இவ்வாறு பெற்றோர் புகார் தெரிவித்தனர்.அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, ''இக்கேள்விக்கான பதில், 'சியூக்கி'. ஆனால், மெட்ரிக் பாடப் புத்தகத்தில் பதில் தரப்படவில்லை,'' என்றனர்.








      Dinamalar
      Follow us