ADDED : செப் 06, 2011 11:46 PM
சென்னை: தமிழக முதல்வரை, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசினர்.
சேமநல நிதியை 10 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் துணைத் தலைவர் முரளி, செயலர் அறிவழகன், பொருளாளர் சுதா, நூலகர் காமராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணபிரசாத், ஆர்.மோகன்தாஸ், கஜலட்சுமி, அறிவுநிதி, பூங்கொடி, கே.சுப்ரமணியன், ஆர்.கிருஷ்ணகுமார், இனியன், எம்.ராமலிங்கம், வி.ஆனந்த் ஆகியோர் சந்தித்தனர். முதல்வரிடம் சங்க நிர்வாகிகள் அளித்த மனு: வழக்கறிஞர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவித் தொகையை இரண்டு லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். வழக்கறிஞர்களுக்காக வீட்டு வசதி திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். நியாயமான விலையில் வீட்டு மனைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.