ADDED : செப் 11, 2011 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : டாஸ்மாக் உபயத்தால், தினமும் ரகளையில் ஈடுபட்ட தந்தையை, மகனே கொலை செய்தார்.திருநெல்வேலி, பழையபேட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்,55.
கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தினமும், மது அருந்திவிட்டு வந்து, வீட்டில் தகராறு செய்வார்.நேற்று பிற்பகலில், வீட்டில் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமுற்ற அவரின் மகன் செல்வக்குமார்,30, கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பேட்டை போலீசார் செல்வக்குமாரை கைது செய்தனர்.சுப்பிரமணியன் எப்போதும் குடிபோதையில் இருந்ததால், செல்வக்குமார் தான், இனிப்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து தாய், தந்தை, மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.செல்வக்குமார் சிறைக்குச் செல்வதால், அவரது குடும்பம் தவிக்கிறது.