ADDED : செப் 14, 2011 11:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களில் கழுதைப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்காக இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கழுதைகளுடன் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த கழுதைப்பால் சிறுவர்கள், குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை, சளி , உள்ளிட்ட நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுவதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இதனால் கழுதைப்பால் விற்பனை இப்பகுதியில் அதிகரித்துள்ளது