UPDATED : செப் 14, 2011 02:11 PM
ADDED : செப் 14, 2011 01:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: இனி கலவரங்களை தடுக்க சர்வ கட்சியினரின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை பெற வேண்டும் என தா.பாண்டியன் கூறினார்.
திருச்சி வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழக சிறைகளில் 10 வருடஙகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவர்களை விடுவிக்க வேண்டும். மாநிலத்தில் இனி கலவரங்கள் ஏற்படுவதை தடுக்க சர்வகட்சியினரின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை பெற்றபின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடது சாரிகட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. இந்த கூட்டணி தொடரும் என்றார்.

