ADDED : செப் 21, 2011 06:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாறைப்பட்டியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (29).
விவசாயி. மூன்று மாதங்களுக்கு முன் அவரை ஒரு நாய் கடித்தது. அப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டார். தொடர் சிகிச்சை எடுக்கவில்லை. சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரேபிஸ் பாதிப்பு இருந்தது தெரிந்தது. ஆஸ்பத்திரியில் அதற்கென உள்ள செல்லில் அடைக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இவருடன் சேர்த்து மதுரையில் இந்த ஆண்டில் ரேபிஸ் பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.