ADDED : செப் 23, 2011 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லாது என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்துள்ளது.
இம்மனு, வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லாது என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, அப்பீல் மனு தாக்கல் செய்வதாகவும், அதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் முறையிட்டார். அப்பீல் மனுவை, திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, 'முதல் பெஞ்ச்' தெரிவித்தது.