ADDED : செப் 23, 2011 11:56 PM
நாகர்கோவில்: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று, குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு எட்டப்படாத நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு கூட்டம் நாகர்கோவிலில் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நூர்முகம்மது, லீமாரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள், வெற்றி வாய்ப்புள்ள உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட விஷயங்கள் ஆராயப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த செயலாளர் முருகேசன், ''பத்மனாபபுரம், குளச்சல், குழித்துறை ஆகிய மூன்று நகராட்சிகளிலும், 20 பேரூராட்சிகளிலும், முஞ்சிறை, மேல்புறம் ஊராட்சி ஒன்றியங்களிலும் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பெயர்களை மாநிலக்குழு அறிவிக்கும்'', என்றார்.