sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மக்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் :தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள்

/

மக்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் :தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள்

மக்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் :தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள்

மக்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் :தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள்


UPDATED : செப் 28, 2011 12:13 AM

ADDED : செப் 27, 2011 11:19 PM

Google News

UPDATED : செப் 28, 2011 12:13 AM ADDED : செப் 27, 2011 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''மக்கள் சுதந்திரமாக ஓட்டளிக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும். அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை, மீண்டும் ஒருமுறை நடத்த வேண்டும்'' என, மாநில தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை கோயம்பேடு மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், நேற்று பிற்பகல் நடந்தது. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - காங்கிரஸ் - பா.ஜ., - பகுஜன் சமாஜ் - இ.கம்யூ., - மா.கம்யூ., - பா.ம.க., - தேசியவாத காங்கிரஸ் ஆகிய, 10 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், இ.கம்யூ., தவிர மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க., சார்பில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், செந்தமிழன் ஆகியோர் பங்கேற்றனர்.

உள்ளாட்சித் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது குறித்து, அனைத்துக் கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. திருச்சி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தான் நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், 'அது குறித்து மத்திய தேர்தல் கமிஷனில் தான் கேட்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us