ADDED : அக் 04, 2011 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: புதரில் கிடந்த சாமி சிலைகள் மீட்கப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்து பூன்தண்டலம் பகுதயில் உள்ள வயல்வெளியில் இருந்த புதரில் தென்னங்கீற்றை சுற்றி சாமிகள் சிலைகள் கிடந்ததாக அப்பகுதியில் வந்த சிலர் சதுரங்கப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த எஸ்.ஐ., தனபால் தலைமையிலான போலீசார் சாமி சிலைகளை மீட்டனர்.
இதில் முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சாமி சிலைகள் இருந்தன. கடத்தப்பட்டசிலைகளா? என போலீசார் விசாரணை நடத்திவருகிறனர்.

