sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முத்தூட் நிறுவன கொள்ளையன்வள்ளியூர் கோர்ட்டில் சரண்

/

முத்தூட் நிறுவன கொள்ளையன்வள்ளியூர் கோர்ட்டில் சரண்

முத்தூட் நிறுவன கொள்ளையன்வள்ளியூர் கோர்ட்டில் சரண்

முத்தூட் நிறுவன கொள்ளையன்வள்ளியூர் கோர்ட்டில் சரண்


ADDED : அக் 12, 2011 12:07 AM

Google News

ADDED : அக் 12, 2011 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூரில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் தங்க நகை அடகு நிறுவனத்தில், நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு கொள்ளையன், வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தான்.திருப்பூர், காங்கயம் ரோட்டில் முத்தூட் மினி பைனான்ஸ் தங்க நகை அடகு நிறுவனம் உள்ளது.

கடந்த மாதம் 24ம் தேதி, இந்நிறுவனத்துக்குள் புகுந்த கொள்ளையர், 1,381 சவரன் நகை மற்றும் 2.36 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். திருப்பூர் போலீசார், கொள்ளை கும்பலில் ஆறு பேரை முதலில் கைது செய்து, நகைகளை மீட்டனர். அடுத்த இரு நாட்களில், காளி என்ற மற்றொரு கொள்ளையனை கைது செய்தனர்.முக்கிய குற்றவாளியான, ஈரோடு கருங்கல்பாளையம், சொக்காய் தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன், நாங்குநேரியை சேர்ந்த மணிவண்ணன் ஆகியோரை பிடிக்க, போலீசார், தேடுதல் வேட்டை நடத்தினர். இவர்களில் வெங்கடேசன், கடந்த 7ம் தேதி, சேலம் ஜே.எம்., கோர்ட் எண் 3ல் சரணடைந்தான்.மணிவண்ணன், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் ஜே.எம்., கோர்ட்டில் சரணடைந்தான். மாஜிஸ்திரேட் 15 நாள் சிறை காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டான். இருவரையும் திருப்பூர் போலீசார், 'கஸ்டடி' எடுத்து, முத்தூட் கொள்ளை குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us