ADDED : செப் 15, 2011 11:22 PM

கோவை:ரூ.125 கோடி, மில் அபகரிப்பு வழக்கில், லாட்டரி அதிபர் மார்ட்டின் தாக்கல் செய்த ஜாமின் மனு, வரும் 19ல் விசாரணைக்கு வருகிறது.கோவை, கணபதியைச் சேர்ந்தவர் நரஹரிசெட்டி; மில் அதிபர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் இவர், 10 கோடி ரூபாய் கடன் பெற்றார். இக்கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், மில் அதிபர் கடத்தப்பட்டு, மில்லை அபகரித்துக் கொண்டதாக, லாட்டரி அதிபர் மீது புகார் எழுந்தது.மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து மார்ட்டின், உறவினர் பெஞ்சமின் ஆகியோரை கைது செய்தனர். 10க்கும் மேற்பட்டோர் இவ்வழக்கில் தலைமறைவாகி விட்டனர்.வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட மார்ட்டின், பெஞ்சமின் ஆகியோர் ஜாமின் கேட்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் அவகாசம் கேட்டதையடுத்து, மனு மீதான விசாரணையை நீதிபதி சொக்கலிங்கம் வரும் 19க்கு ஒத்தி வைத்தார்.