sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டு கேட்க பெண்களுடன் செல்லும் வேட்பாளர்கள்:"குவார்ட்டர்' செலவு குறைவதால் "புது டெக்னிக்'

/

ஓட்டு கேட்க பெண்களுடன் செல்லும் வேட்பாளர்கள்:"குவார்ட்டர்' செலவு குறைவதால் "புது டெக்னிக்'

ஓட்டு கேட்க பெண்களுடன் செல்லும் வேட்பாளர்கள்:"குவார்ட்டர்' செலவு குறைவதால் "புது டெக்னிக்'

ஓட்டு கேட்க பெண்களுடன் செல்லும் வேட்பாளர்கள்:"குவார்ட்டர்' செலவு குறைவதால் "புது டெக்னிக்'


ADDED : அக் 12, 2011 12:19 AM

Google News

ADDED : அக் 12, 2011 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்:ஓட்டு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள், 'குவார்ட்டர்' செலவை குறைக்கும் நோக்கில், தங்களுடன் பெண்கள் கூட்டத்தை அழைத்துச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில், அதிக பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே கூட்டம் அதிகம் கூடுகிறது.இதனால் குவார்ட்டர், பிரியாணி இல்லாமல் கூட்டத்தைக் கூட்ட முடியாத நிலை உள்ளது. ஆண்கள் என்றால், 'குவார்ட்டர்' கொடுக்காமல், கூட்டம் கூட்டுவது சாத்தியமே இல்லை என்ற சூழல் உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வாக, கூட்டம் சேர்க்க சில நுணுக்கங்களை, சில வேட்பாளர்கள் லாவகமாக கையாண்டு வருகின்றனர். ஆண்களை அழைத்துச் சென்றால், 'குவார்ட்டர்' வாங்கித் தர பெரும் தொகை செலவாகிறது. இதைத் தவிர்க்க, ஓட்டு கேட்க செல்லும் போது, அதிகளவில் பெண்களை அழைத்துச் செல்கின்றனர். பெண் ஒருவருக்கு தலா 200 ரூபாய் பணமும், மதிய உணவு பிரியாணி பொட்டலமும் கொடுக்கப்படுகிறது. ஆண்களாக இருந்தால், இத்துடன், 'குவார்ட்டர்' பாட்டிலும் கொடுக்க வேண்டும்.

ஆண்களுக்கு பதிலாக, பெண்களை அழைத்துச் சென்று ஓட்டு கேட்கும் போது, பெண்களின் ஆதரவு அந்த வேட்பாளர்களுக்கு இருக்கிறது என்ற எண்ணத்தில், ஓட்டு கிடைக்கும் என்பதும் முக்கிய காரணமாகும். ஓட்டு கேட்டு செல்ல, நகர்புறங்களில் உள்ள பெண்கள் தயக்கம் காட்டுவதால், கிராமங்களில் இருந்து, வேலைக்கு கூலியாட்களை அழைத்துச் செல்வதைப் போல், பெண்களை அழைத்துச் செல்கின்றனர்.இதனால், கிராமங்களில் வயல் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும், பற்றாக்குறையாகியுள்ளது. எந்த சிரமமும் இன்றி, தினமும் 200 ரூபாய் பணமும், மதியம் பிரியாணியும் கிடைப்பதால், கூலி வேலைக்குச் செல்லும் பலரும், தற்காலிக விடுமுறை எடுத்து, நகர்புறங்களில் ஓட்டு கேட்க செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us