மீண்டும் மாஜி நேரு கைது:மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு
மீண்டும் மாஜி நேரு கைது:மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு
ADDED : செப் 22, 2011 01:34 AM

முதுநகர்:கடலூர் மத்திய சிறையில் உள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கில், திருச்சி போலீசாரால் நேற்று கைது öŒ#யப்பட்டார்.
நில அபகரிப்பு வழக்கில் கைதாகிய நேரு, கடந்த 25ம் தேதி முதல், கடலூர் மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஈரோடு, கொல்லம்பாளையம் சாயப்பட்டறை உரிமையாளர் கருணாநிதி என்பவர், திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை, 2008ம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர்கள் மிரட்டி வாங்கியதாக திருச்சி மாநகர கமிஷனரிடம் புகார் செய்தார்.இது தொடர்பாக நேரு, அவரது சகோதரர் ராமஜெயம் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிந்த திருச்சி போலீசார், கடந்த 19ம் தேதி காங்., பிரமுகர் சண்முகம் உட்பட ஐந்து பேரை, கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீஸ் குழுவினர், நேற்று காலை 10 மணிக்கு, கடலூர் மத்திய சிறைக்குள் சென்று, சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் நேருவை பூர்வாங்க கைது நடவடிக்கை மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களில் அவரிடம் கையெழுத்து வாங்கினர். பின், காலை 10.15 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றனர்.