அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரம் எதிர்த்த வழக்கு வாபஸ்
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரம் எதிர்த்த வழக்கு வாபஸ்
ADDED : ஆக 12, 2026 03:44 AM

சென்னை : த.வெ.க., அரசின் பெரும்பான்மை ஓட்டெடுப்பில் பங்கேற்ற, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, 'சட்டப்படி, 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்டு கடிதம் அளிக்கப்பட்டு உள்ளதால், தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டு உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
'இந்த பொது நல மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய போகிறோம்' என, நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
