ADDED : ஏப் 12, 2017 04:29 AM

ஆர்.கே. நகரில் பண வினியோக விவகாரத்தில் சிக்கியுள்ள தினகரன், தேர்தலில் போட்டியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்து விடுமோ என்ற பயம், சசிகலா ஆதரவு வட்டாரத்திற்கு ஏற்பட்டு உள்ளது. அதற்குள், தினகரனை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்து விட வேண்டும் என, அவசரம் காட்டுகின்றனர்.
ஆனால், அதற்கு பா.ஜ., மேலிடமும், மத்திய அரசும் முட்டுக்கட்டை போடாமல் இருக்க வேண்டுமே... அதற்காக உதவ முன்வந்துள்ளார் சுப்பிரமணியன் சாமி. அவர், பா.ஜ.,வில் இருந்த போதிலும், சசிகலாவின் அரசியல் ஏஜன்டாக, சமீபகாலமாக செயல்பட்டு வருகிறார்.
அவர் வகுத்து தந்துள்ள திட்டப்படியே, தினகரனை முதல்வராக்கும் முயற்சிகள் துவங்கி உள்ளன. ஏற்கனவே, சசிகலாவை முதல்வராக்க, சாமி பகிரங்க ஆதரவு கொடி துாக்கினார். அவரது யோசனைப் படியே, கூவத்துாரில் எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைத்திருந்தனர். அதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மூலம், தினகரனை முதல்வராக்கும் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -
