ADDED : ஜூலை 14, 2011 05:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படவேண்டும் என பாக்., பிரதமர் யூசுப் ராசா கிலானி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களுக்கு தனது சார்பிலும், அதிபர் சார்பிலும் இரங்கல் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தெற்காசியாவிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.