ADDED : ஆக 03, 2011 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:தேனி அம்பேத்கர் வடக்கு தெருவைச் சேர்ந்த நாகேந்திரன் மகள் நாகவள்ளி, 17.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் சன்னாசிக்கும், 24, கடந்த 13ம் தேதி கட்டாய திருமணம் செய்து வைத்தனர். நாகவள்ளி, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜராஜேஸ்வரியிடம் புகார் செய்தார். அவர், மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், நாகேந்திரன், அவரது மனைவி அங்காள ஈஸ்வரி, மணமகனின் தந்தை கருப்பையாவை போலீசார் கைது செய்தனர்.