ADDED : ஆக 03, 2011 07:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரியின் நெரிசலை குறைக்க கலெக்டர் அலுவலக பஸ்ஸ்டாண்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
விபத்தில் எலும்பு முறிவு, தலைக்காயம், பொது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் இப்பகுதி செயல்படும். இப்பிரிவை மதுரை கலெக்டர் சகாயம் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் நடராஜன், எம்.எல்.ஏ.,க்கள் முத்துராமலிங்கம், சுந்தரராஜன், அண்ணாத்துரை, பி.வி.கதிரவன், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ராமானுஜம், ஆர்.எம்.ஓ.,க்கள் திருவாய்மொழி பெருமாள், பிரகதீஸ்வரன், ஏ.ஆர்.எம்.ஓ., காந்திமதிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.