ADDED : ஆக 12, 2011 12:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் தேங்கியுள்ள குப்பைகள் 3 மாத காலத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள நிலையில், குப்பைகளை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் நிர்மல் கூறுகையில், குப்பைகளை அகற்றும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே நேரம் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கையிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

