ADDED : ஆக 15, 2011 10:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை தங்கள் கண் முன்னே தண்டிக்க கோரி, போலீசாரை வழிமறித்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியையடுத்த திருத்தங்கலில் சத்தியா நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தனசேகரன் (35) அப்பள்ளி மாணவிகளிடம் சில்மிஷங்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சுதந்திரதின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர், இதுகுறித்து தனசேகரனை நேரில் கண்டித்தனர். இத்தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து தனசேகரனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்றனர். ஆனால் போலீசாரை வழிமறித்த பெற்றோர் தங்கள் கண் முன்னே தனசேகரனை தண்டிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.