ADDED : ஆக 23, 2011 04:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்திற்கு மாற்றக்கூடாது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தாக்கல் செய்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும். தை முதல்நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் உரிமையை பறிக்கக்கூடாது. தமிழ் உணர்வாளர்களின் உணர்வை மதித்து புத்தாண்டை மாற்றுவதற்கான சட்டமசோதாவை திரும்பப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.

