ADDED : ஆக 28, 2011 05:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வலுவான லோக்பால் மசோதா கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திய அன்னாவின் கோரிக்கை தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து அன்னா தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். இதனையடுத்து அன்னாவுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் பேரணி நடைபெறுகிறது. ஆயிரகணக்கானோர் கலந்து கொண்ட இந்த பேரணி மெரீனா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை நடைபெறுகிறது.