ADDED : செப் 01, 2011 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், மாவட்ட தலைமை அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என, அக்கட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து தி.மு.க., தலைமையகம் வெளியிட்ட அறிக்கை:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட தலைமை அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.தேர்தலில் போட்டியிடும் நபர், கட்சியில் தனது பொறுப்பு மற்றும் விவரங்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 5ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

