sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எரிந்த நிலையில் இருவர் பிணம்

/

எரிந்த நிலையில் இருவர் பிணம்

எரிந்த நிலையில் இருவர் பிணம்

எரிந்த நிலையில் இருவர் பிணம்


ADDED : செப் 14, 2011 01:25 AM

Google News

ADDED : செப் 14, 2011 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர் : ஆற்காடு அருகே, எரிந்த நிலையில் விவசாயி மற்றும் ஒரு பெண் பிணமாக கிடந்தனர்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த அனத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனிசாமி, 45. இவரது மனைவி விஜயா, 35. இவர்களுக்கு திவ்யா, தீபா என்ற மகள்களும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர்.முனிசாமி, அவரது நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். கடந்த 10ம் தேதி, முனிசாமியின் மனைவி விஜயா, தன் மகன், மகள்களை அழைத்து கொண்டு, கண்ணமங்கலத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை, முனிசாமி வீட்டிலிருந்து அதிகளவு புகை வந்தது.தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு, முனிசாமியும், அதே ஊரைச் சேர்ந்த பாபுவின் மனைவி சுமதி, 35, என்பவரும் நிர்வாணமாக கருகிய நிலையில், பிணமாக கிடந்தனர்.சுமதி, தன் மகன்களுடன் அதே ஊரில் வசித்து வந்தார். இவரது கணவர் பாபு, சென்னையில் மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்கிறார். முனிசாமிக்கும், சுமதிக்கும் இருந்த கள்ள தொடர்பால், இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us