ADDED : செப் 17, 2011 11:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வெடி குண்டு வைக்கப் பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவன் 10-க்கு தகவல் தந்துள்ளான் .இதனையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் போனில் வந்த தகவல் புரளி என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வெடி குண்டு மிரட்டல் தகவல் கிடைத்தவுடன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., காமராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார்.