sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் பாதுகாப்புக்குசிறப்பு அதிகாரி நியமனம்

/

தேர்தல் பாதுகாப்புக்குசிறப்பு அதிகாரி நியமனம்

தேர்தல் பாதுகாப்புக்குசிறப்பு அதிகாரி நியமனம்

தேர்தல் பாதுகாப்புக்குசிறப்பு அதிகாரி நியமனம்


ADDED : செப் 25, 2011 05:55 AM

Google News

ADDED : செப் 25, 2011 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புக்கான சிறப்பு அதிகாரியாக, ஐ.ஜி., அலெக்சாண்டர் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பதட்டமான ஓட்டுச் சாவடிகள், தேவையான போலீசார் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.தமிழகத்தில், திருச்சி மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ., மரியம் பிச்சை மரணத்தை அடுத்து, அத்தொகுதிக்கான இடைத்தேர்தல், அடுத்தமாதம் 13ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும்,



அடுத்த மாதம் 17,19ம் தேதிகளில் நடத்தப்படுவதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தலுக்கான பணிகளில், அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்யத் துவங்கியுள்ளனர்.இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைக் கவனிக்க, ஐ.ஜி., அலெக்சாண்டர் மோகனை, சிறப்பு அதிகாரியாக தமிழக போலீஸ் தலைமை நியமித்துள்ளது. அலெக்சாண்டர் மோகன் தலைமையிலான போலீஸ் குழு, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், பதட்டமான ஓட்டுச் சாவடிகள் எவை, அங்கு நியமிக்க வேண்டிய போலீசின் அளவு, தேவையான போலீசார், தேர்தல் பிரசாரத்தின் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், கண்காணிப்பு போன்றவை குறித்த தகவல்களை, தலைமைக்குத் தெரிவிக்கும். இதன்படி, பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.-நமது சிறப்பு நிருபர்-








      Dinamalar
      Follow us