ADDED : செப் 27, 2011 01:01 AM
கோட்டயம் :கேரள மாநிலம் கோட்டயம் அருகே, குமாரநல்லூர் தேவி கோவில் நவராத்திரி விழா, செப்., 25ல் துவங்கியது.
இதையொட்டி கோவிலில், ஒன்பது நாட்களுக்கு, தேவி பகவத் மகாத்மியம் ஓதுதல் நடைபெறும். சமஸ்கிருத பண்டிதர் பேராசிரியர் அச்சுதன் நம்பூதிரி தலைமையில், நவக யக்ஞம் நடைபெறும். அக்., 4ம் தேதி துர்காஷ்டமி தினம் முதல், சரஸ்வதி பூஜை துவங்க உள்ளது. அக்., 5ம் தேதி மகாநவமி சங்கீத ஆராதனையும், 6ம் தேதி விஜயதசமி அன்று, புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெறும்.நவராத்திரி தின நாட்களில், பத்தாயிரம் புஷ்பாஞ்சலியும், வேதபாட சாலை மாணவர்களால் 'முறஜெபம்' நிகழ்ச்சியும் நடைபெறும். டிச., 1 முதல் 10ம் தேதி வரை ஆண்டு திருவிழா நடக்கும். இதில், டிச., 9ம் தேதி, பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தரிசனம் நடைபெறும்.கோவிலுக்கு நன்கொடை, பூஜை செய்ய விரும்புவோர் நிர்வாக அதிகாரி, குமாரநல்லூர் தேவி கோவில், குமாரநல்லூர், கோட்டயம் 686 016 என்ற முகவரிக்கு, செக், டி.டி., எடுத்து அனுப்பலாம். விவரங்களுக்கு, 0481- 231 2737ல் தொடர்பு கொள்ளலாம்.