UPDATED : செப் 27, 2011 05:36 PM
ADDED : செப் 27, 2011 05:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் உதவியாளராக இருந்த சுதீந்திர குல்கர்னி கைது செய்யப்பட்டார்.
இன்று அவர் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் குல்கர்னியை வரும் அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து குல்கர்னி திகார் சிறையில் அடைக்கப்படுகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., கட்சி, ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் வெளியில் நடமாடுவதாக கூறியுள்ளது.