ADDED : அக் 10, 2011 12:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் ஒருவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கோவையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கோவையைச் சேர்ந்த வக்கீல் ஆனந்த் ஈஸ்வரன் என்பவர் சில நாட்களுக்கு முன் துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். அப்போது அவரை போலீசார் சிலர் தாக்கியதால், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தாக்கிய போலீசாரைக் கைது செய்யக்கோரி கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்ட வக்கீல்கள், எஸ்.பி., அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

