ADDED : அக் 12, 2011 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை பார்களில் விடிய, விடிய மது விற்பனை நடக்கிறது.உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
பிரசாரம் முடிய இரவு 10 மணிக்கு மேலாகிறது. பிரசாரத்தில் ஈடுபட்டவர்களில் பலர் களைப்பு தீர 'மது' பானம் அருந்துகின்றனர். இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றாலும் இவர்கள் வசதிக்காக விடியவிடிய அரசு மதுக்கடை பார்களில் மதுபாட்டில்களை விற்கின்றனர்.பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. இதைப்பற்றி குடிமகன்கள் கவலைப்படுவதில்லை. இதனால் பார் நடத்துபவர்களுக்கு வருவாய் கொட்டுகிறது.பிரவீண்குமார் அபினபு எஸ்.பி., கூறுகையில்,'ரோந்துபிரிவு போலீசார் மூலம் அரசு மதுக்கடை பார்கள் கண்காணிக்கப்படும்,'என்றார்.

