UPDATED : அக் 13, 2011 09:12 AM
ADDED : அக் 13, 2011 08:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.
இதில் தி.மு.க. வேட்பாளர் நேரு தில்லை நகரில் ஓட்டளித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செல்வராஜூம் ஓட்டளித்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் ஜெயஸ்ரீ, எம்.பி. குமார் ஆகியோர் ஓட்டளித்தனர். இத்தேர்தல் பணிகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு சில இடங்களில் இவர்களுக்கு போதிய அளவில் நாற்காலி , டேபிள் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்படவில்லை என புகார் கூறினார். திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பதால் அவர்கள் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மற்றபடி தேர்தல் அமைதியாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

