sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருணை மனு மீது 11 ஆண்டுநடவடிக்கை தகவல் பெற முடிவு

/

கருணை மனு மீது 11 ஆண்டுநடவடிக்கை தகவல் பெற முடிவு

கருணை மனு மீது 11 ஆண்டுநடவடிக்கை தகவல் பெற முடிவு

கருணை மனு மீது 11 ஆண்டுநடவடிக்கை தகவல் பெற முடிவு


ADDED : ஆக 28, 2011 01:16 AM

Google News

ADDED : ஆக 28, 2011 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர்:''ராஜிவ் கொலையாளிகளின் கருணை மனுக்கள் மீது, 11 ஆண்டுகளாக ஜனாதிபதி அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என, வழக்கறிஞர் திலீபன் கூறினார்.வேலூர் மத்திய சிறையில், ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு, செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அவர்களைப் பார்க்க அவர்களது ரத்த உறவுகளைத் தவிர, மற்றவர்களை அனுமதிக்க சிறைத் துறையினர் மறுத்து விட்டனர். நேற்று மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீபன், வேலூர் சிறைக்கு வந்து, முருகனைப் பார்க்க அனுமதி கேட்ட போது, சிறைத் துறையினர் மறுத்து விட்டனர்.பிறகு, வழக்கறிஞர் திலீபன் கூறியது:முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு, 11 ஆண்டுகளுக்கு முன் கருணை மனு அனுப்பினர். அதன் மீது, மத்திய உள்துறை அமைச்சகம், இதுவரை எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது. ஏன் காலதாமதமாக கருணை மனு நிராகரிக்கப்பட்டது. நிராகரிப்பின் போது சொல்லப்பட்ட காரணங்கள் குறித்தும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



சாதாரணமாக, இதற்கு 30 நாள் தேவை.ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 7 ( 1 ) படி, அவசர மனு தாக்கல் செய்தால், ஐந்து நாளில் பதில் வந்து விடும். இதற்கான முயற்சியில், 15 வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, இவர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர்'' என்றார்.இதே போல, மும்பை முன்னாள் நீதிபதி சுரேஷ் என்பவர் மூன்று பேரையும் பார்க்க மனு கொடுத்த போதும், சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.








      Dinamalar
      Follow us