ADDED : செப் 30, 2011 12:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் 12 பேரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் சசிகலா புஷ்பா, தி.மு.க., சார்பில் போட்டியிடும் பொன். இனிதா, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சிந்தியா வைலட் லில்லி உள்ளிட்ட 12 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சுயேட்சை வேட்பாளர் சாந்தி என்பவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.