ADDED : பிப் 24, 2026 11:17 PM

நோன்பும் தொழுகையும்
இறைவன் விதித்துள்ள ஐந்து வேளை தொழுகை, ரம்ஜான் நோன்பு, ஏழை வரி ஜகாத்தை நிறைவேற்றுங்கள். அத்துடன் ஹஜ் யாத்திரை செல்லுங்கள். அப்போது சொர்க்கம் உங்களுடையதாகி விடும்' என்கிறார் நபிகள் நாயகம்.தினமும் தொழுகை செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் ைஷத்தானின் துாண்டுதலுக்கு ஆளாவீர்கள். மனம் அலை பாயும் தன்மை கொண்டது. அதில் மோசமான எண்ணங்களை தோன்றச் செய்வான் ைஷத்தான். அதற்குள் சிக்கினால் மீள்வது கடினம். உதாரணமாக வேலையின்றி ஒருவர் இருக்கிறார். அவர் தொழுகை செய்யவில்லை.
அப்போது மற்றவரை பற்றி வீணாக பேசுவார். மற்றவரின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவார். இதனால் பாவம் சேரும். இதற்கெல்லாம் ைஷத்தானின் துாண்டுதலே காரணம். எனவே நோன்பு இருங்கள். தொழுகை செய்யுங்கள். லட்சியத்துடன் செயல்படுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:34 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:02 மணி

