ADDED : ஆக 18, 2011 10:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, 78 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரத்து 110 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து 15 ஆயிரத்து 594 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகத்திலுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, உபரிநீர் வரத்து காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.