ADDED : மார் 08, 2025 07:11 PM

சிரித்து மகிழ்வோம்
சிரிக்கத் தெரிந்த உயிரினம் மனிதன் ஒருவனே. கள்ளம் கபடம் இல்லாதவர்களால் மட்டுமே சிரிக்கவும் முடியும். பிறரை சிரிக்க வைக்கவும் முடியும். அவர்களில் ஒருவரே
நபிகள் நாயகம். ஒருநாள் மூதாட்டி அவரைத் தேடி வந்தார். அவரை வரவேற்றவர், ''வாருங்கள்.
அம்மா. தங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா'' எனக் கேட்டார். ''நான் பயணம் செய்ய ஒட்டகம் வேண்டும்''
''சரி. ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்து தருகிறேன்'' ''என்னது ஒட்டகக் குட்டியா... அதில் என்னால் பயணிக்க முடியுமா.. என்ன?''
''அதைத்தான் என்னால் தர முடியும்'' என சொல்லியபடி அருகில் இருந்தவரிடம் கண்ஜாடை காட்டினார் நாயகம். அடுத்த நிமிடமே பெரிய ஒட்டகத்துடன் வந்தார் அவர்.
அதைப் பார்த்த மூதாட்டி, ''இது எனக்கா... ஒட்டகக்குட்டியைத் தானே தருவதாக சொன்னீர்கள்'' என்றாள். நாயகம் சிரித்தபடியே, ''அம்மா... ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டிதானே'' என சொன்னார். இதைக் கேட்டதும் அங்கு சிரிப்புச் சத்தம் வெடித்தது.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:58 மணி