ADDED : மார் 09, 2025 07:12 PM

பெற்றோரை போற்றுவோம்
'நான் பல சோதனைகளை அனுபவிக்கிறேன். இறைவனே... இதில் இருந்து விடுதலை கிடையாதா?' என விரக்தியுடன் சிலர் புலம்புவார்கள். அவர்களைக் கவனித்தால்
ஒரு உண்மை தெரியும். அது என்ன? அவர்கள் பெற்றோரை கவனித்திருக்க மாட்டார்கள். அதனால்தான் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.
இது பற்றி நாயகம் சொல்வதைப் பாருங்கள்.
ஒருநாள் நாயகத்திடம், ''நான் வாழ்வில் துன்பப்படுகிறேன். இதில் மீள வழி சொல்லுங்கள்'' எனக் கேட்டார் தோழர் ஒருவர்.
''பெற்றோருக்கு துன்பம் செய்வதை தவிர, மற்ற எல்லா பாவங்களுக்கும் இறைவன் மன்னிப்பு அளிக்கிறான். ஆனால் பெற்றோருக்கு துன்பம் செய்து விட்டால் மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுவான். நீ இதுபோல் எதுவும் செய்யவில்லையே'' என்றார்.
''இல்லை''
''சரி. உனது தாய் உயிருடன் இருக்கிறாரா'' ''இல்லை. சிறிய தாயார்தான் உள்ளார்''''அப்படியானால் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடு. இதுவே செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம்'' என்றார்.
'பெற்றோரிடம் கனிவுடன் பழகுங்கள். அவர்கள்தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் பாதுகாத்தவர்கள்' என்கிறது குர்ஆன்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:58 மணி