10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்ன? ஸ்டாலின் கேள்வி
10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்ன? ஸ்டாலின் கேள்வி
UPDATED : மார் 25, 2024 08:37 PM
ADDED : மார் 25, 2024 07:23 PM

நாங்குநேரி: 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் என்ன என நாங்குநேரி பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

லோக்சபா தேர்தல், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தேர்தலையொட்டி தி.மு.க, கூட்டணி வேட்பாளர்களான கன்னியாகுமரி காங்., வேட்பாளர் விஜய்வந்த், உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது,
இ.பி.எஸ்., மீது ஸ்டாலின் கடும் தாக்கு!
இ.பி.எஸ்., பேசும் இடங்களில் பா.ஜ.,வை விமர்சித்து ஒரு வார்த்தையாவது பேசினாரா?பா.ஜ.,வின் வசனம், கதை, திரைக்கதையில் போட்டி போடும் நாடகத்தை நடத்துகிறார்; பா.ஜ.,வை எதிர்ப்பதற்கான துணிவு அவரிடம் இல்லை.நாட்டின் நிலை பற்றி கவலையில்லாமல் வளைந்த முதுகோடு வலம் வருகிறார் இ.பி.எஸ்.,
மாநில உரிமைகளை பறிப்பவர்கள் மீது ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று சவால் விடுவது வெற்றுச் சவடால்.
ஒரே பல்லவியை பாடுகிறது பா.ஜ.,
தமிழ்நாட்டில் மழை, வெள்ளம் வந்த போது பிரதமர் மோடி எங்கிருந்தார். வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு பிரதரம் மோடி ஒரு பைசாவாவது தந்தாரா ? தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு பேரிடர் பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ. 37 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டும் இதுவரை தரவில்லை. வெள்ள நிவாரணம் கோரி நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளோம். வெள்ள நிவாரணம் தராமல் தமிழக மக்களை ஏளமான பேசுகிறார்கள். நிதி தரவேண்டிய மத்திய நிதி அமைச்சர் பிச்சை என்று ஆவணத்தோடும் கூறுகிறார். இன்னொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதி என்கிறார். தமிழர்கள் என்றால் ஏன் இவ்வளவு வெறுப்பு? தமிழர்களை மதிப்பவரை நாம் பிரதமராக்க வேண்டும்.
10 ஆண்டுகள் தமிழகத்தற்கு மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் என்ன ?எங்களது மகளிர் உரிமைத்திட்டம், காலை உணவுத்திட்டத்தால் ஏராளமானோர் பயன் அடைந்துள்ளனர். மக்களை நேரடியாக சென்று சந்திக்கும் நீங்கள் நலமா திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கது. ஜனநாயகத்தை காக்கும் போர்களத்தில் நாம் வெற்றி பெற மக்கள் நமக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பா.ஜ.,வுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியனருக்கு நாம் செய்யும் துரோகம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதி இந்தியா, அமளி இந்தியாவாக மாறிவிடும். தமிழர்கள் பா.ஜ.வுக்கு வாக்களிப்பது அவமானம். வரும் லோக்சபா தேர்தலில் மோடியை தோற்கடிக்க வேண்டும்.எய்ம்ஸ் மருத்துவமனைன மதுரையில் எங்கிருக்கிறது என பூத கண்ணாடி வைத்து தேடினால் கூட கிடைக்கவில்லை.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

காங்., வேட்பாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி லோக்சபா, விளவங்கோடு சட்ட சபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

