ADDED : ஆக 11, 2011 05:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: தமிழகத்தில் புகழ்பெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோமதியம்மனுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன் கோவில் சங்கர நாராயணன் கோவிலும் ஒன்று. அரியும் சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் வகையில், இங்கு ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் வீதிவுலா வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது. நேற்று முன்தினம் ஆடித்தேரோட்டம் நடந்தது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோமதியம்மனுக்கு சங்கரநாராயணனாக காட்சித்தரும் ஆடித்தபசு விழா இன்று மாலை நடக்கிறது.

