ADDED : ஆக 13, 2011 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி:விருநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சி கீழ்க்குடி குதிரை காட்டூரணியில் கருப்பசாமி கோயில் உள்ளது.
கல்லால் செய்யப்பட்ட கருப்பசாமி சிலையை சில நாட்களுக்கு முன்பு யாரோ உடைத்து விட்டனர். இதன் பின், உலகநாயகி அம்மன் கோயிலுள்ள கருப்பசாமி சிலை, உலக நாயகி அம்மன் சிலைகளும் உடைக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் முனீஸ்வரர் கோயிலுள்ள சாமி சிலைகளும் உடைக்கப்பட்டன. ஆத்திரமுற்ற கிராம மக்கள், கீழ்க்குடி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு திடீர் பதட்டம் உருவாகவே, அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., ஜானகிராம், திருச்சுழி இன்ஸ்பெக்டர் கண்ணன், பரளச்சி எஸ்.ஐ., காளைச்சாமி ஆகியோர் கிராம மக்களை சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.