ADDED : ஆக 28, 2011 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானல் வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இங்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை உயிரினங்கள் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது.
சமீபத்தில் நடந்த உத்தேச ஆய்வில், காட்டெருமை -500 முதல் 700, புலிகள் -5, சிறுத்தைகள்- 50, யானைகள்- 40 இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகள் பெருகியுள்ளதால், அதை விரும்பி உண்ணும் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்ட வன அலுவலர் சம்பத் கூறுகையில், ''வனத்துறையின் கண்காணிப்பால், அழிவில் இருந்து விலங்குகள் தப்பியுள்ளன. பண்ணைக்காடு, பெருமாள்மலை, செண்பகனூர், குணாகுகை, பில்லர் ராக் போன்ற சுற்றுலா இடங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. வழக்கமான வழித்தடங்களை தவிர, மற்ற பகுதிக்குள் பயணிகள் செல்ல தடை விதித்துள்ளோம்,'' என்றார்.

