ADDED : ஆக 30, 2011 03:03 AM
மதுரை:மதுரையை சேர்ந்த தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினர் சூடம்மணி.ஆடிட்டர் அமர்நாத் நிலத்தை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகார்படி, சூடம்மணி, மற்றொரு தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டுசுரேஷ், ஒப்பந்ததாரர் மாணிக்கம், உதயகுமார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கில் முன்ஜாமின் கோரி ஐகோர்ட் கிளையில் சூடம்மணி மனு செய்தார். அவருக்கு முன் ஜாமின் வழங்கி நீதிபதி ஆர்.மாலா உத்தரவிட்டார். மாநகராட்சி கிழக்கு மண்டல தி.மு.க., தலைவர் வி.கே.குருசாமி யின் மனைவி தங்கவேலம்மாள். இவர் மீது அவனியா புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில் முன்ஜாமின் கோரி, ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். அவரது சார்பில் வக்கீல்கள் சாமுவேல்ராஜ், பழனிச்சாமி ஆஜராயினர். ஜாமின் வழங்க அரசு வக்கீல் ராமர் ஆட்சேபம் தெரிவித்தார். எனினும், முன்ஜாமின் வழங்கி நீதிபதி ஆர்.மாலா உத்தரவிட்டார்.

