ADDED : செப் 09, 2011 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்: பொன்முடிக்கு விழுப்புரம் கோர்ட்டில் ஜாமின் கிடைத்தால் அவரை சிறை வாசலிலேயே மற்றொரு வழக்கில் கைது செய்ய திருவாரூர் போலீசார் காத்திருந்தனர்.திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில், தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நில மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்தால் பொன்முடியை, திருவாரூர் போலீசார் கைது செய்ய தயார் நிலையில் இருந்தனர். இதனால், நேற்று காலை முதல் கடலூர் மத்திய சிறை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், திருவாரூர் போலீசார் மதியம் 12.20 மணிக்கு திரும்பிச் சென்றனர்.