sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., போட்டிவேட்பாளர்கள் நீக்கம்

/

அ.தி.மு.க., போட்டிவேட்பாளர்கள் நீக்கம்

அ.தி.மு.க., போட்டிவேட்பாளர்கள் நீக்கம்

அ.தி.மு.க., போட்டிவேட்பாளர்கள் நீக்கம்


ADDED : அக் 11, 2011 11:32 PM

Google News

ADDED : அக் 11, 2011 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கட்சிக்கு எதிராக செயல்பட்ட போட்டி வேட்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:அ.தி.மு.க.,வின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் நடந்து கொண்டதாகவும், உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், வடசென்னை மாவட்டத்தில் லட்சுமிசாய், ஜாம்புலிவடிவேலு, குமார், தென் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த லோகு, திருமாறன் ஆகியோர் நீக்கப்படுகின்றனர்.அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 3வது வார்டு அ.தி.மு.க., செயலர் முருகேசன், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி முன்னாள் நகராட்சி தலைவர் பூவை ஞானம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us