ADDED : செப் 21, 2011 01:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சியில் ரயிலில் அனாதையாக கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில், ஹவுரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயிலில் எஸ்-3 பெட்டியில் கேட்பாற்று ஒரு மர்ம பை இருந்துள்ளது. இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முன்வரவில்லை. சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மர்மபையை திறந்து பார்த்த போது ஓன்றரை கிலோ எடை கொண்ட 10 சிறிய பாக்கெட்டுகளில் சுமார் 10 கிலோ கஞ்சா பெட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக ரயில்வே துறையின் போதை தடுப்பு போலீசார் கஞ்சா பையினை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.