ADDED : ஆக 18, 2011 12:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அருகே மின்சாரம் தாக்கி மாமியார், மருமகள் பலியானார்கள்.
சேலம் மாவட்டம் எடப்பாடியையடுத்த ஒக்கிலிப்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (50). அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால், இவரது வீட்டின் முன் கம்பி ஒன்றில் காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க முயன்றார். அப்போது கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது மருமகள் மணிமேகலையும் பலியானார். எடப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.